இலங்கைசெய்திகள்

சத்தமின்றி சாதிக்கும் கொக்குவில் இந்து சிறுமி!!

Archeeve

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 2 இல் கல்வி கற்கும் தர்ஷன் கஜிஷனா என்ற மாணவி தேசிய, சர்வதேச சதுரங்க போட்டிகளில் சாதித்து வருகிறார்.
2023 ம் ஆண்டில் சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்த இவர் தற்போது வரை தனது வயது பிரிவிலும், அதனிலும் கூடிய வயது பிரிவுகளிலும் சாதித்து அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.


சென்ற ஆண்டு (2023) நடைபெற்ற ‘Battle of mind ‘ என்கிற பெரும் சதுரங்க போட்டியில் மாவட்ட ,தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றார் மேலும் 8 வயதிற்குட் பட்ட இளையோர்களுக்கான (Youth competition ) சதுரங்க போட்டியில் 6 வயதிலேயே மாவட்டமட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் 9 போட்டிகளில் பங்கு பற்றி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 13 ம் இடம் (equal to 5th place ) பெற்ற ஒரே ஒரு தமிழ் மாணவி இவராவார்.


மற்றும் SLSCA இனால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 9 வயதிட்குட்பட்ட பெண்களுக்கான குழு போட்டிகளில் தலைமை தாங்கி தேசிய ரீதியில் 6 ம் இடத்தை பெற்றதோடு அப்போட்டியிலேயே மாகாண மற்றும் தேசிய board சாம்பியன் பட்டத்தையும் வெற்றியீட்டியிருந்தார்.


தற்போது சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய இவர் கடந்த மாதம் இடம்பெற்ற’ Western Asian international tournament ‘போட்டிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தியதோடு சர்வதேசபோட்டிகளில் பங்கு பற்றிய வயது குறைந்த தமிழ் சிறுமி என்கிற அடையாளத்தையும் உலக சதுரங்க பேரவையினால் Fide Rating பெற்ற தேசிய ரீதியில் 7 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களில் சாதித்த இரண்டாவது பெண்ணுமாவார்.


மேலும் மாவட்ட, மாகாண ரீதியில் பல வெற்றிகளை தனது வயதிலும் மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளிலும் குவித்து வருவது மட்டுமன்றி FIDE இன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உலகம் முழுவதும் கின்னஸ் சாதனைக்காக நடாத்தப்பட்ட போட்டியில் கண்டி மாவட்டத்தில் 7 வயதிக்குட்பட்ட பிரிவில் பங்குபற்றி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.


அத்துடன், தொடர்ந்து பாடசாலைகளுக்கான கல்வி அமைச்சின் கீழ் நடாத்தப்பட்ட போட்டிகளில் (2024)தனது வயது பிரிவில் மாவட்ட , மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய போட்டியில் பங்குபற்ற தயாராகவுள்ளார். மேலும் 56 நாடுகளிற்கு மேல் பங்கேற்கும் “Common Wealth Youth Competition “சர்வதேச போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இச்சிறுமியின் அபாரதிறமையை பாராட்டுவதுடன் வாசகர்களுடன் பகிந்து கொள்வதில் ஐவின்ஸ் தமிழ் செய்திதளமும் அகமகிழ்கின்றது

Related Articles

Leave a Reply

Back to top button