இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (31.07.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

ரணிலுக்கு ஆதரவாக பெரமுனவின் 92 அங்கத்தவர்கள்!!

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரமுன கட்சியைச் சேர்ந்த 92 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

2.

ராஜபக்சக்களின் கூட்டு முடிவே பெரமுன வேட்பாளர்!!

ஜனாதிபதி தேர்தலில் பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது ராஜபக்சக்களின் முடிவேயன்றி கட்சியின் முடிவல்ல என்கிறார்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார.

3.

பொலிசாரின் தாக்குதலில் இளைஞன் பலி!!

யாழ்.  பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன்  ஒருவர் அதிக இரத்தப்போக்கு மற்றும் உடல் உள் உறுப்புகள் பாதிப்படைந்ததால் மரணமடைந்துள்ளார். 

4.

20 இலட்சம் பணத்துடன் சென்ற இளைஞன் மர்ம மரணம்!!

முல்லைத்தீவு மல்லவி பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடாவுக்கு நாளை செல்ல காத்திருந்த நிலையில் 20 இலட்சம் பணத்துடன் வெளியே சென்ற நிலையில்  வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

5.

கொழும்பு நீதிமனாறில் நால்வருக்கு மரண தண்டனை!!

கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்ட பெந்திகேவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

6.

கேரள நிலச்சரிவினால்  அதிகரிக்கும் பாதிப்பு!! 

கேரள மாநிலம் வயநாட்டில்  ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்துள்ளதாக கேரள முதலமைச்சரின் அலுவலக அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

7.

நாமல் – சஜித் இரகசிய சந்திப்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8.

ரணிலை ஜனாதிபதியாக விடமாட்டேன் – அலைபேசியில் மிரட்டல்!!

ஜனாதிபதி ரணிலைச் சந்திக்கச் சென்ற மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மொட்டுக் கட்சியின் பலமான ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் அல்லது அநுர யார் வெற்றி பெற்றாலும் நான் இருக்கும் வரை, ரணிலை வெற்றிபெற அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button