இலங்கைசெய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை!!

Human Rights Commission

கடந்த மாதம் 23 ஆம் திகதி கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்து சம்பவத்தின் போது கிண்ணியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினால் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை 06.12.2021 அன்று மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்திற்கு ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்திற்கு சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பினால் முறையிடப்பட்டிருந்ததுடன் ஆணைக்குழுவின் கண்காணிப்பு பிரிவு ஊடகவியலாளர்கள் கிண்ணியா சம்பவத்தின் போது தாக்கப்பட்டமை தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதுடன் அதன் தொடர் நடவடிக்கையாக குறித்த கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button