இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (30.08 2024 – வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சி!!

இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. .

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2023ல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 70,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. 

காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகளுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகளுக்கு நீதி கோரி அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்  ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

3.

சமூக வலைத்தளங்களில் பயன்பாடு தொடர்பாக வெளியான தகவல்!!

உலகளவில் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது.

அதில்,   அதிய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் (Facebook) தொடர்ந்து முதலிடத்திலுள்ளதாக DataReportal இன் சமீபத்திய தரவுகளில் தெரியவந்துள்ளது.

4.

யாழ்.  சாவகச்சேரியில் பொலிசார் விசேட சுற்றிவளைப்பு!!

யாழ். கொடிகாமம் சாவகச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 டிப்பர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, அனுமதிப் பத்திரங்களின்றி மணலுடன் 24 டிப்பரும் அனுமதியின்றி மரக்குற்றிகளுடன் ஒரு டிப்பரும் என 25 டிப்பர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

5.

இந்திய முக்கியஸ்தர் இலங்கையில்!!

முன்னறிவிப்பு எதுவும் இன்றி  இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையில் இரண்டு நாட்கள்  தங்கி இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

6.

மன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!! 

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து , மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று  (29) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதேவேளை,  இன்றைய தினமும் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.

செய்தியாளர்  – சமர்க்கனி 

Related Articles

Leave a Reply

Back to top button