இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய ( 06.09.2024 – வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!

News

 1.

10 கோடி பெற்றார் சுமந்திரன்!! 

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு விசேட அபிவிருத்தி நிதியாக ரூபா.  10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

2.

மிதிவெடி அகற்றிய போது ஏற்பட்ட பரிதாபம்!!

மாங்குளம் – துணுக்காய் பகுதியில் மிதிவெடி அகற்றும் போது ஏற்பட்ட விபத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் காயமடைந்துள்ளனர். 

3.

நான்கு அமைச்சர்கள் பதவி நீக்கம்!!

உடன்அமுலாகும் வகையில் ராஜாங்க அமைச்சர் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

ராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர இந்திக அனுருத்த மொஹான் பிரியதர்ஷன டீ சில்வா சிறிபால கம்லத் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.

பிரித்தானியாவில் சிறிதரன் அளித்த உறுதி மொழி!! 

இனிமேல் இறுதிவரை தமிழ் தேசியத்தில் இருந்து பிறளவேமாட்டேன் எனவும் காலத்தின் தேவையறிந்தே தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை வழங்கியதாகவும் தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

5.

சுவிஸ் குடும்பஸ்தரை ஏமாற்றி பணம் பறித்த மூன்று பெண்கள் யாழில் கைது!! 

யாழ்ப்பாணத்தில், டிக்டொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button