இன்றைய (22.07.2024 – திங்கட்கிழமை) பத்திரிகை முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!
News
1.
தமிழ் தேசிய கட்சிகளிடம் சிறிதரன் விடுத்துள்ள வேண்டுகோள்!!
தமிழ் தேசிய கூட்டமைப்பை மீள உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகளிடம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2.
தமிழ் பொதுவேட்பாளருக்கே எங்கள் வாக்கு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு!!
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கே அளிக்கவுள்ளதாகத் தேரிவித்துள்ளார்.
3.
அரச உத்தியோகத்தர்களுக்கு 5 000 ரூபா சம்பள உயர்வு!!
சகல அரச ஊழியர்களுக்கும் 5 000 ரூபா ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
4.
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு!!
எதிர்வரும் செப்ரெம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் எனவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
5.
வைத்தியர் அர்ச்சுனா சாகும் வரை உண்ணாவிரதம்!!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனா உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை நல்லுாரில் தியாகி திலீபனின் நினைவிடத்தில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகியுள்ளார் என அவரது முகநூல் நேரலையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி