இலங்கைசெய்திகள்

வாக்கியங்கள் பொறித்த கைக்குண்டு மீட்பு!

Jaffna

இன்று (21) ஞாயிற்றுகிழமை ஊர்காவற்துறை பகுதியில் இருந்து புலிகளின் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டானது ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, அம்பிகா நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

சொந்தமான தனியார் காணி ஒன்றில், மண்ணில் புதைந்திருந்த நிலையில் குறித்த கைக்குண்டானது மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. குறித்த கைக்குண்டை அவதானித்த பிரதேசவாசிகள் இராணுவத்தினருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கினர்.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குண்டினை மீட்ட இராணுவத்தினர் அதனை பலாலி இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த குண்டில் கொல்பவன் வெல்வான், எதிரியின் பக்கம், தயாரிப்பு தமிழீழம் என்ற வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button