இலங்கைசெய்திகள்

யாழில் கொரோனா ரணகளத்திலும் கிளுகிளுப்பு, கொழும்பு யுவதி பொலிசாரிடம் ஒப்படைப்பு!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சமூகவிரோதச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பிலிருந்த இளைஞர்கள் மூவர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட விடயம் செய்திகளில் வெளிவந்திருந்தது.

கொழும்பிலிருந்து வந்த பெண் இளவாலை பகுதியில் சமூகவிரோதச் செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. சம்பவத்தை அடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்திருக்கின்றனர்.

அதன் பின்னர் குறித்த பெண்ணுடன் தவறான தொடர்பிலிருந்த இளவாலை, சேந்தாங்குளம் பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் மூவரை பிடித்து கட்டாய தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாக இளவாலை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களின் புகைப்படங்கள் வீடியோக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button