இலங்கைசெய்திகள்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பாரிய இரும்பு துண்டு – போக்குவரத்துக்கு இடையூறு!!

vavuniya

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பாரிய இரும்பு துண்டு இன்று (23) அதிகாலை முதல் காணப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறித்து இரும்பு துண்டானது பாலம் அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட போது பார ஊர்தியில் இருந்து வீழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பேரூந்து நிலையத்தில் இருந்து பேரூந்துகள் வெளியேறும் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த இரும்பு துண்டு காணப்படுவதால் பேருந்துகள் வெளிச்செல்வதிலும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பேரூந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button