துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது.
6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர்.
இந்த மரபணு குறைபாடு காரணமாக பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே நன்றாக காது கேட்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மிடாஸ் பூனைக்குட்டி இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றது.