இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, தற்போது நாட்டிலும் உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னர்இ வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முதலில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நேரத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால்இ பலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும்இ வார இறுதியில் வரவிருக்கும் நீண்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைத் தவிர்த்து நடந்து கொண்டால்இ நாட்டை மீண்டும் பூட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் பதிவாகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்இ குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள்இ குளங்கள்இ அணைக்கட்டுகள் போன்றவற்றில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் போது முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டுக்கு நாடு இதே மாதிரியாக திறக்க அனுமதிப்பது என்பது பயணத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில் பொதுமக்கள் எந்த அளவிற்கு பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பொதுமக்களின் மோசமான நடத்தைகள் மூலம் சுகாதார ஆலோசனைகள் மீறப்படுவதை தொடர்ந்தும் அவதானிக்கும் பட்சத்தில் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுஇ பி.சி.ஆர் மற்றும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் நிறுவனங்களில் செய்யப்படுவதில்லை மற்றும் நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் முறையான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் கடுமையான பரிசோதனை செயல்முறை மீண்டும் தொடங்கினால் நாட்டில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1இ000 ஐ தாண்டும் என்றும் அவர் கூறினார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்படாமையினாலேயே நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்இ டிசம்பர் நடுப்பகுதிக்குள் நோய்த்தொற்றுடையவர்களின் எண்ணிக்கை தீவிரமடையும் பட்சத்தில்இ நாடு மீண்டும் முன்னையதை போன்று மூடப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.