இலங்கைசெய்திகள்

தேங்காய் எண்ணெய் விற்பனையில் வரவுள்ள மாற்றம்!!

Coconut oil

தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, உற்பத்தியாளர் யார், தேங்காய் எண்ணெய் உற்பத்தி உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் என்பன உள்ளடக்கப்படாது விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் அல்லாத வேறு பல எண்ணெய் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றினால் தொற்றா நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது எனத் தெரிவித்த அவர்,  

இதனைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த சில மாத கால அவகாசம் வழங்கப்படும் பின்னர் நடைமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button