மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 57வது ஆண்டு விழாவும் பரிசில் வழங்கும் நிகழ்வும் 06/08/2022 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சனசமூகநிலையத்தலைவர் திரு. திவாகர் தலைமையில் வளர்மதி சனசமூக அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு, யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி(தேசிய பாடசாலை) அதிபர் உயர் திரு. நடராசா சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக மட்டுவில் தெற்கு I .311 கிராம அலுவலரும் சமாதான நீதவானுமாகிய திருமதி மா.சோபிகா மற்றும் தொழிலதிபரும் முத்துமாரியம்மன் மரக்காலை உரிமையாளருமான திரு.சே பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் சமாதான நீதவானுமாகிய திரு.க.அன்ரன் தேவகுமார் மற்றும் முன்னாள் சனசமூக நிலையத்தலைவர் திரு.சி.டினோசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்!
யா/கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை மாணவிகளின் மேற்கத்தேய இசையுடனான விருந்தினர் வரவேற்பினைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், ஸ்தாபகர் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தல், தேசியக்கொடியேற்றல், நிலையக்கொடியேற்றல், வரவேற்பு நடனம் எனத் தொடரவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை வளர்மதி மாதர் சங்க நிர்வாக சபை உறுப்பினரும் ஆசிரியருமான திருமதி.மஞ்சுளா நிகழ்த்தவுள்ளார்.
தொடர்ந்து தலைமையுரை,ஓய்வு நிலை அதிபரும் நிலைய செயலாளருமான திரு.ச.கிருஷ்ணன் அவர்களின் கல்விக்கழக பொறுப்பாசிரியர் உரையும் அறிக்கையும் இடம்பெறும்.
கல்விக்கழக பரிசளிப்பு நிகழ்வு, விருந்தினர் உரை, உள்நாட்டு பாரம்பரிய நிகழ்வு, பரிசில் வழங்கல், மென்பந்து சுற்றுபோட்டக்கான பரிசில் வழங்கல், தாச்சி போட்டிக்கான பரிசில் வழங்கல், கலை நிகழ்வுகள் எனத்தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன.
கல்விமான்கள், விளையாட்டுவிரும்பிகள், சமூகஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
தகவல் - வளர்மதி சனசமூக நிலையமும் அதன் உப அமைப்புளும்