இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பேருந்து விபத்து!!

accident

கோமரங்கடவெல பகுதியிலிருந்து தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாட்களை ஏற்றிச் சென்ற பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.திருகோணமலை – சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிவிபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button