இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (09.10.2024 – புதன்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

news

 1.

பணத்தை தீயில் போட்டு எரித்தவர் கைது!! 

யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர்  வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2.

தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!! 

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து,  கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

3.

ஜெனீவா தீர்மானத்திற்கு அரசாங்கம் மறுப்பு!! 

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் உள்நாட்டுச் செயன்முறை மூலம் மனித உரிமை பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

4.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து!! 

இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்ட கால உறவை நினைவுகூர்ந்த ஜோபைடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்தூகளையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார். 

5.

கொழும்பு வந்தது சீனக்கப்பல்!! 

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பாரம்பரிய  பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ” போ லேங்” உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button