இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொலை

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய மிலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளராக செயற்பட்டுள்ளார்.

தற்போது இத்தாலியில் வசிக்கும் சமிந்த என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், இன்று அதிகாலை 3 மணியளவில் முல்லேரியா, தெல்கஹவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

விகாரைக்கு அருகில் உள்ள நபரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி வீட்டில் உள்ளவர்களை எழுப்பிவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button