இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (02.08.2024 – வெள்ளிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1.

மாணவர்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்!! 

 நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 3 வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.

ஜனாதிபதி வசமே பெரும்பான்மை!!

சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ள நிலையில் பெரும்பான்மை பலம்  அவரிடம் உள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார். 

3.

பொதுவேட்பாளர் தோற்றால் அரசுடன் பேசமுடியாது – சுமந்திரன்!!

தமிழ் பொது வேட்பாளர் தோல்வியடைந்தால் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முடியாது என சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

4.

பாடசாலை மாணவர்களிடையே மோதல்!!

ஹட்டன் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து நான்கு மாணவர்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5.

கடற்படை படகு மோதி இந்திய மீனவர்  மரணம் – ஒருவரைக் காணவில்லை!!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது கடற்படைப் படகு மோதி,  இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஒருவரைக் காணவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

6.

இலங்கையில் பணவீக்கம் உயர்வு!! 

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button