இன்றைய (30.09.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1.
இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்!!
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுகளை நடத்துவதற்காக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு நாள் விஜயமாக எதிர்வரும் 4ம் திகதி இலங்கை வருகிறார்.
2.
தோல்வியுற்றவர்களுக்கு இடமில்லை!!
கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையோருக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
3.
இந்திய தூதுவர் மற்றும் தமிழ் கட்சிகள் சந்திப்பு!!
இலங்கைக்கான இந்தியத் நூதுவர் சந்தோஷ் யா, தமிழ் தேசிய கட்சிகளை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
4.
சர்வதேச நாணய நிதிய குழு மீளாய்வுக்காக இலங்கை வருகிறது!!
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக அதன் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் கிருஷ்ண சிறினிவாசன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வருகின்றனர்.
5.
யாழ். இந்துவில் 52 மாணவர்களுக்கு 9ஏ!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர்.
6.
முதல் வழக்கு நாமல் மீது!!
இலங்கை மின்சார தனியார் கம்பனியின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான மொண்டேரோ ஜீப் வாகனம் ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்திற்குப் பயன்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
7.
வரி செலுத்துதல் தொடர்பான இறுதி தீர்மானம்!!
வரி செலுத்துவதற்கு தகுதியான அனைவரும் 2023மற்றும் 2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்திகள் -சமர்க்கனி