இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (12.10.2014 – சனிக்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1. 

யப்பானிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!!

யப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங் யோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2.

மாம்பழத்துடன் மாவையைச் சந்தித்த தமிழரசுக் கட்சி!!

பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழரசுக் கட்சியினர் மாம்பழச் சின்னத்துடன் சென்று மாவையைச் சந்தித்துள்ளனர்.

3.

6 ஆசனங்களுக்கு 396 வேட்பாளர்கள் போட்டி!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 6 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

4.

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.

22 தேர்தல் மாவட்டங்களில் 690 வேட்பு மனுக்கள்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்ந்து 690 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

6.

யாழில் பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்றவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டனர்.

சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50 மாத்திரைகளும் , ஒரு தொகை வெற்று மாத்திரை அட்டைகளும் காணப்பட்டுள்ளன.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button