இலங்கைசெய்திகள்

‘யுகதனவி’ பயன் இல்லையேல் நான் ஆதரவு வழங்கமாட்டேன்! – மஹிந்தானந்த உறுதி!!

yukathanavi

‘யுகதனவி’ ஒப்பந்தம் நாட்டுக்கு நன்மை பயக்காவிடின் அரசில் அங்கம் வகித்தாலும் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டீசல் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகொன்றுக்கு 25 ரூபா செலவாகின்றது.

அதேபோல், எல்.என்.ஜியில் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகு ஒன்றுக்கு 18 ரூபாவுக்கு மேல் செலவாகும் பட்சத்தில் அதற்கு அனுமதி வழங்க முடியாது.

இது தொடர்பில் சகல தரப்பினரும் உரிய அவதானத்தைச் செலுத்த வேண்டும்.

எனவே, நன்மையற்ற நிபந்தனைகளுக்கு அரசு இணங்கக் கூடாது. அதனை சர்வாதிகாரப் போக்குடைய நிறுவனத்துக்குக் கையளிக்கக் கூடாது” – என்றார்

Related Articles

Leave a Reply

Back to top button