அழகு குறிப்புசெய்திகள்

ப்ருதிவி முத்திரையில் மறைந்துள்ள இரகசியம் இதுதான்!!

yoga

புத்தரின் கையில் உள்ள பிருத்வி முத்திரை அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். 

உடலில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு. ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமான கூறுகளைக் குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான தனிமங்களை அதிகரிக்கவும் முத்ரா பிருத்வி அவசியமாகிறது. உடல் எடைக்கும், முடி வளர்ச்சிக்குமான சூத்திரம் இதில் மறைந்துள்ளது.

பிருத்வி முத்ராவை எப்படிச் செய்ய வேண்டும்?

பெருவிரலை மடக்கி மோதிர விரலை அதன்மீது அழுத்திப் பதிய வைக்க வேண்டும். இதுதான் பிருத்வி முத்ரா. தரையில் அமர்ந்து கொண்டு, முதுகை வளைக்காமல் முதலில் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு, பெருவிரலை மடக்கி, அதை மோதிர விரலின் மேலே வைத்து அமுக்கி, பிடித்திருக்க வேண்டும்.

முடி வளர

என்னடா இது?… இந்த முத்திரை முடியைக்கூட வளர வைக்குமா என்று ஆச்சர்யமாகக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ப்ருத்வி முத்திரை முடியின் வளர்ச்சி உடலில் உள்ள எர்த் எலிமன்ட்சுடன் தொடர்புடையது. மோதிர விரலும், கட்டை விரலும் அழுத்தம் பெறும்போது செல்களின் இயக்கம் தூண்டப்படுகிறது. இதனால் முடி வளர்கிறது. இந்த முத்திரையின் மூலம் உடலில் நேர்மறை ஆற்றல் உடல் முழுவதும் பரவி, உடல் முழுக்க நேர்மறை ஆற்றலை பரவச் செய்யும்.

• பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.

• எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.

•அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது

• மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது

• நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது

• தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்

• சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்.  பிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்குப் புலப்படும்.  இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்ததால் தான் புத்தரால் இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய மனதையும் அமைதிப்படுத்தும் கருவியாக மாற முடிந்தது. அவரையும் அது நல்வழிப்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Back to top button