இலங்கைசெய்திகள்

இன்று கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து முடிவு!!

Wheat flour

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29) எடுக்கப்படவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

அதேநேரம் இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு உணவக  உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button