இலங்கைசெய்திகள்

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

Weather

நாடு முழுவதும் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் பனிமூட்டம் நிறைந்த, மப்பும் மந்தாரமுமான கால நிலை ஒரு சில நாட்களாக காணப்படுகிறது.

இந்த Gloomy weather காரணமாக ஏதோ மத்திய மலை நாட்டில் இருப்பது போன்ற உணர்வில் எல்லோரும் குழந்தைகளுடன் வெளியில் சுற்றித்திரிவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இது மூடுபனி என்றே எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில், இது வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக, அசுத்தமான, அதிக துணிக்கைகள் நிறைந்த காற்று, இந்தியாவின் புது டில்லி போன்ற வளி மாசடைந்த இடங்களில் இருந்து, இலங்கை வளி மண்டலத்திற்குள் உட்புகுந்ததால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என்று பலரும் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் விதமாகவே நமது நாட்டின் எயார் குயாலிட்டியும் கடந்த சில நாட்களாக மோசமடைந்து வருவதை கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதுவராலய AQI தரவுகள் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள், இந்த நாட்களில், சுவாசம் சம்பந்தப்பட்ட, சளிக் காய்ச்சல் போன்ற நோயாளிகளுக்கு அதிகம் ஆட்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.

எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது. அவசியம் இல்லாமல் குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே செல்லும் போது முகக்கவசம், தொப்பி போன்றவைகளை அணிந்து கொள்வது பாதுகாப்பானது.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.

Related Articles

Leave a Reply

Back to top button