இலங்கைசெய்திகள்

போர் ஒத்திகை பயிற்சியில் மூன்று நாடுகள்!!

War rehearsal training

தென் அரபிக் கடல் பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.

மூன்று நாடுகளைச் சேர்ந்த அதிநவீன கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் கப்பலில் இருந்து இயக்கப்படும் போர் விமானங்களும் போர் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டன.

இதேவேளை இந்த நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், 3 நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவையே இந்த பயிற்சியின் நோக்கம் என மாலைத்தீவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகிய இந்த போர் ஒத்திகை பயிற்சி, நேற்று மாலைத்தீவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button