நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஒன்று இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குறித்த செயலி விசிட் ஸ்ரீலங்கா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த செயலியின் ஊடாக சுற்றுலா தலங்களுக்கான கட்டண சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும்.
உள்நாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக குறித்த செயலி தயாரிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள உணவகங்களின் கட்டண விபரங்கள், தங்குமிட வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தியும் அவற்றுக்கான கட்டணங்களை செலுத்தக் கூடிய வகையில் இந்த செயலி தயாரிக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.