வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும் இணைந்து நடாத்திய “வவுனியம்-05” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு இன்று (28) காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில், இடம்பெற்ற இந்நிழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா பல்கலைகழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கலாபூசணம் இ.சிவசோதி, தமிழ்நிதி அருணா செல்லத்துரை ஆகியோரும்
கௌரவ அதிதியாக கலாநிதி நா.செந்தூர்ச்செல்வனும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், நூலை துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியை தமிழ்மணி கே.மேழிக்குமரன் பெற்றுக்கொண்டார்.
இந்நூலிற்கான ஆய்வுரையை ஆசிரியர் சி.வரதராஜன் நிகழ்த்தியிருந்தார். பதிலுரையை நூலாசிரியர் நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கிஷோரன்.