வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும், அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரத்தால் உயர்த்த வேண்டும், அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழிர்களின் கருத்து சுதந்திரம் ஆகிய நான்கு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய வயதெல்லையை உயர்த்தாதே, அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்ற கூற்றை விலக்கிகொள், கருத்து சுதந்திரத்தினை முடக்காதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
செய்தியாளர் கிஷோரன்