வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வவுனியா குளம் உட்பட்ட பெரும்பாலான குளங்களில் வான் பாய்கிறது.
அந்தவகையில் வவுனியாகுளம், நொச்சிக்குளம், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம், வைரவபுளியங்குளம், அரசமுறிப்புகுளம், பாவற்குளம், பேராறு நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு குளங்களில் வான் பாய்கின்றது.
வவுனியா குளத்தில் வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றார்கள். அத்துடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வவுனியா குளத்தடியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேரும் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் கிஷோரன்