இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மக்களின் பொறுப்பற்ற செயல்!!

University

 பேராதனைப் பல்கலைக்கழகத்திலஆ 80வது ஆண்டு நிறைவை ஒட்டி, நேற்று பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஒரே நாளில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலை பொதுமக்கள் குப்பை கூடமாக மாற்றிய அதிர்ச்சி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இது தவிர, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அருங்காட்சியகம், ஜோர்ஜ் கீட்டின் ஓவியங்களின் தொகுப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் 5,000 அரிய புத்தகங்களின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில், அதனை பார்வையிட சென்றிருக்கும் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.

உணவுகளை சாப்பிட்டு விட்டு குப்பைகளை பொது இடத்தில் வீசுவது. அரச வளங்களை பாதுகாப்பு அற்ற விதத்தில் பயன்படுத்துவது போன்ற பல விடயங்கள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்திற்கு முன்பு குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதை பார்க்க கூடியதாக உள்ளது.

மகாவம்சத்தின் (Great Chronicle) பழமையான ஓலையின் மூலப் பிரதி இந்த நூலகத்தில் தான் பாதுகாக்கப்படுகின்றது.

வரலாற்றில் ஒரு பல்கலைக்கழகம் பொதுமக்களின் சார்பில் திறந்த நாள் தினத்தை அறிவித்தது இதுவே முதல் முறை.

இப்படியான சூழலில் பொதுமக்கள் இப்படி பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டது வேதனைக்குரிய விடயமே.

Related Articles

Leave a Reply

Back to top button