உலகம்செய்திகள்

இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர்!!

UN Human Rights Council

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதிப்பிக்கப்பட்டுள்ள எழுத்து மூல ஆவணம் குறித்து எதிர்வரும் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் உரிமைகளை ஏற்றுக்கொள்வது, இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள தாமதம் தமது அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஒன்று தீர்மானத்திற்கு இணை அணுசரவை வழங்குவதில் இருந்து விலகி, இரண்டு வருடங்கள் கடந்தபோதிலும், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பான திட்டமிடலை இலங்கை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமை வகிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கைக்கு இலங்கை பிரதிநிதிகள் குழு பதிலளிக்கவுள்ளது.

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button