உலகம்செய்திகள்

ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு – உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்!!

Ukraine

ரஷ்யா, உக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மரியபோல் மற்றும் வொல்னொவகா ஆகிய நகரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 11.30 இலிருந்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யுக்ரைனின் மரியபோல் துறைமுக நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, அங்கிருந்து இடம்பெறும் மின்சாரம், உணவு, நீர் மற்றும் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை மட்டுமே இந்த போர் நிறுத்தம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அந்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கடும் சவால்களை கடந்து அண்டை நாடுகளுக்கு யுக்ரைனில் இருந்து பலர் நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில், மீட்பு பணிக்காக யுக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பு மூலம் யுக்ரைனில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button