Breaking Newsஉலகம்செய்திகள்

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் – பதற்றத்தில் மக்கள்!!!

Turkey

துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.* 

அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நகரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதிகம் பாதித்த பகுதியாக உள்ளது. ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் அதே நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அந்த பகுதி மக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களின் பாதிப்பு அதிக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

1939-ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.

தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டு, நிலநடுக்க பாதிப்பு பகுதிகளில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button