இலங்கைசெய்திகள்

அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறது கூட்டமைப்பு!!

TNA

இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

இது சம்பந்தமாக ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இந்திய உயர்ஸ்தானிகரகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்தன.

இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழு ஒன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவில் இரா.சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன்இ சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அழைப்பின் பேரில் இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அவரது விஜயம் நிறைவடையும் தருவாயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இந்தியா அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button