இன்று காலையில் கூட்டமைப்பைச் சந்தித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களிடம் காணிசுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் போன்றவை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வேளையில் இராணுவத்தினரின் காணி சுவீகரிப்பு பற்றி கூறப்பட்டபோது, அது பற்றி எதுவும் தெரியாதது போன்ற பாவனையை வெளிப்படுத்திய ஜனாதிபதியின் முககுறிப்பினை கூட்டமைப்பினர் கவனிக்கவே செய்தனர்.
இராணுவத்தினருக்கு காணி எதற்கு? என அவர் கேட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பிரதிபலிப்பாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிடம் இருந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
‘நீங்கள் இராணுவத்தினர் காணி சுவீகரிப்பதாக கூறியுள்ளீர்கள், அதனால் ஜனாதிபதி எம்மை கேள்வி கேட்கின்றார்’ எனத்தெரிவிக்க, ‘இராணுவத்தினரின் காணி சுவீகரிப்பு தொடர்பாக எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன’ என சட்டத்தரணி சுமந்திரன் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.