கூட்டமைப்பினுள் சுமந்திரனின் கனவுக்கோட்டை தகர்கிறதா – சிறிதரன் அதிரடி பேச்சு!!
TNA
சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகவே இனி தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சி. சிறீதரன் நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்துள்ளார் என ஈழநாடு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் சுமந்திரன் எடுத்த முடிவுகளின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமந்திரன், 22வது திதுத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், எதிராக வாக்களிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். எனது அவதானத்தின் படி, எமது கட்சிக்குள் சுமந்திரனுக்கு எதிராக முடிவெடுக்கும் போக்கே அதிகமாக உள்ளதெனவும் கட்சியின் ஏனைய உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிக்காது, அவர் தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவினை எம்மிடம் வலியுறுத்தியபோதும், அரசியல் கட்சிகளின் விடுதலை மற்றும் குருந்தூர் மலை போன்ற நில ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்குதீர்வு கிட்டும் என்ற அடிப்படையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை உண்டு என்ற ரீதியிலும் நாங்கள் ஆதரவான முடிவை எடுப்பதற்குத் தீர்மானித்தோம் என்றார். நிகழ்நிலை வழியாகவேனும் ஒன்று கூடி குறித்த விடயம் பற்றி அவர் கதைத்திருக்கலாம், அவ்வாறு செய்யாமல் ‘நான் எதிராக வாக்களித்துவிட்டேன்’, என அவர் கூறிய போதும், நாம் மறுக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.
புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து ஒரு வருடத்திற்குள் தீர்வுகாணும் ரணிலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக எவருடனும் பேசாமலே அவர் கூறிவிட்டார். யார் எதிர்ப்புக் கூறுவார்கள் என்ற எண்ணம், கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை இன்னும் பல பின்னடைவுகளைத் தரும் என்பதை அவர் எப்போது புரிந்துகொள்வாரோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக ஈழநாடு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.