மனித உடலில் மிக முக்கியமான உறுப்பாக உள்ள மூளையை ஒரு மர்மமான உறுப்பு என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.ஏனெனில் இன்றைக்கும் பல விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தும் உறுப்பாக மூளை உள்ளது.மூளை குறித்த பல அறிவியல் ஆராய்ச்சிகள் இன்றும் பல உலக நாடுகளில் நடைபெற்றுகொண்டே இருக்கின்றன.
மனித மூளை பற்றிய தகவல்கள்
- சராசரியாக மனித மூளையின் எடை 1.5 கிலோ கிராம் ஆகும்.
- கிட்டத்தட்ட 25 வாட் வரை உங்களது மூளை மின்சாரத்தை உருவாக்கும் திறன் படைத்தது. குறைந்த வால்டேஜ் அளவுகொண்ட ஒரு எல்இடி பல்பை எரிய வைப்பதற்கு உங்களது மூளையை மின்சார சக்தியே போதும்!!
- சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் உபயோகப்படுத்தும் மனதை விட,உங்களது ஆழ்மனம் 30,000 மடங்கு சக்தி படைத்ததாகும்.
- மூளையின் 75 சதவீத பகுதி நீரால் ஆனது.
- மனிதனின் மூளை 18 வயது வரை தான் வளர்ச்சி அடையும். அதன் பிறகு அதன் வளர்ச்சி நின்று விடும்.
- பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 10% பெரிதாக இருக்கும்.
- இரவில் தூங்கும் போது கூட உங்களது மூளை செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். நாம் இந்த உலகில் பிறந்த நொடியிலிருந்து மறையும் நொடிவரை தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் உறுப்பாக மூளை உள்ளது.
- மனிதர்கள் அனைவருக்கும் கைவிரல் ரேகைகள் வித்தியாசமானதாக இருப்பது போலவே மனிதர்களின் மூளை செயல்பாடுகளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
- மனித மூளையின் அளவு கடந்த 5000 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9 கன அங்குலங்கள் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
- 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமலேயே மூளையால் தாக்குப்பிடிக்க முடியும்.