ஆன்மீகம்செய்திகள்

முதலி கோயில் [முல்லைபாட்டி] தெய்வ வழிபாடு!!

Temple

தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ள
சில வீடுகளில் அமைந்துள்ள ”முதலி”கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
சென்ற சனிக்கிழமை-இக்கோயிலின் பொங்கல்-மடை நடை பெற்றது.

பண்டைய வழிபாட்டுத் தொடர்ச்சியை காட்டும் வகையில் இக்கோயில் நடைமுறைகள் அமைந்துள்ளன.

இந்து சமயத்துள் அடங்கும் பலதெய்வ வழிபாட்டு முறைகளில் ”முதலி” யானவளும் அடங்குகிறாள்.
பண்டைக்காலத்து பெண்முதன்மைப்பட்ட சமூகத்தின்  தலைவி இறந்தபின் தெய்வமாக வழிபடும் முறையின்தொடர்ச்சியாக இவ்வழிபாடு இருக்கலாம்.

குறிப்பிட்ட குடும்பத்தின் ”குலதெய்வக்கோயிலாக”’-இது அமைந்துள்ளது.

எமது ஊரில் சில வீடுகளில்–வீட்டு வளவுகளில் இந்த வழிபாடு இன்றும் காணப்பட்டு வருகிறது.போர்த்துக்கேயர் காலத்தில் மறைவான வழிபாடுகளில் ஒன்றாக வீட்டு வளவிலுள்ள” மரவழிபாட்டின்”’  தொடர்ச்சியாக இவ்வழிபாடு அமைந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அசைவ படையல்  இல்லை.  சைவப்படையல்தான் இன்றுவரை தொடர்கிறது. வீட்டுச்சொந்தக்காரரே பூசகராகவும் தொடருகிறார்.

,”முதலிப்பேத்தி” என்ற பெயர் நிலையும் இக்கோயிலுக்கு இருந்துள்ளது.இன்று மெல்ல அருகி ”முதலி அம்மன்”-என்ற உச்சரிப்பையும் உள்ளடக்கி காலம் தொடருகிறது. அருகில் உள்ள கோயில் ஒன்று ”முதல்வி அம்மன்”-என்ற பெயருடன் இன்று இயங்குகின்றதும் கவனிக்கத்தக்கது. இதெல்லாம் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களாகும்.

சில இடங்களில் உள்ள ”முதலிப்பேய்ச்சி”என்ற சொல் வழக்குடன் இதனைச் சேர்த்துப்பார்க்கலாம்.பேய்ச்சி-என்ற சொல் அன்புநிலை அழைப்புடன் தொடர்பு பட்டிருக்கலாம். பேயாடுதல்–நிலையுடனும் இணைத்துப் பார்க்கலாம்.

எவ்வாறாயினும் பண்டைய வழிபாட்டின் தொடர்ச்யைப் பேண ”போர்த்துக்கேயர்காலமும் முக்கியமாக இருந்துள்ளதை இக்கோயிலின் வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.

பழமையான தன்மையால் ”முல்லை மரத்தில் அமர்ந்த–முதலி-யானவளை  ”முல்லைப்பாட்டி” என்று அன்புடன் அழைக்கும் நெஞ்சுக்கு நெருக்கமானபக்தி–வழிபாட்டு நிலையையும் இங்கு காணலாம்.

சஸ்கிருதமந்திர-பூசைமுறைக்கு உட்படாமல் பெருமளவு தனித்துவத்துடன் இன்றுவரை தொடருகின்றது.

தும்பளை-மேற்கு-கலட்டி

நன்றி – முகநூல்

Related Articles

Leave a Reply

Back to top button