தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகங்கள் பிரிவில் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று அதி சிறந்த அரசாங்க அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட பதவியணியினரின் ஆற்றல் மிகு சிறப்பான சேவையினை நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க வகையில் வழங்கியதன் மூலம் வரலாற்றில் இந்த இடத்தைப் பெற்றுக் கொண்டோம் எனவும் அரச அலுவலகங்களில் நாம் என்றும் தனித்துவமானவர்கள் என்பதை தேசிய ரீதியில் நிரூபித்து வரலாற்றில் இந்த மகத்துவம் மிக்க உயர் நிலையினை எட்டியுள்ளோம் எனவும் மகிழ்ச்சி கொள்கின்றனர் அலுவலக உத்தியோகத்தர்கள்.