ஜனாதிபதி முதல் சகல அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் விசேட வரியொன்றை அமுலாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அவர்களது நிதியல்லாத சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை.
அவர்கள் தங்கியுள்ள உத்தியோகப்பூர்வ இல்லம், பயன்படுத்தும் உத்தியோப்பூர்வ வாகனம் போன்றவை இவற்றில் அடங்குகின்றன.
அவற்றுக்கான விசேட வரியை அறவிடுவது குறித்து அரசாங்கம் பல்வேறு தரப்புடன் கலந்துரையாடி இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.