உலகம்செய்திகள்

சூடானில் இராணுவ மோதல் – 56 பேர் பலி!!

Sudan

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை இராணுவ அதிகாரி முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் இராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. 

ஆர்.எஸ்.எப். துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். அறிவித்துள்ளது. 

சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

170 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button