களுத்துறை மாவட்ட பாடசாலை ஒன்றில் தரம் 1 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரால் நடத்தப்பட்ட கண், காது மற்றும் பற்கள் தொடர்பான பரிசோதனையின் போது, சில பிள்ளைகளுக்கு 10 – 12 மீற்றர் இடைவெளியில் உள்ள எழுத்துகளை இனங்காண முடியாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் அடம்பிடிக்கும் போது, பெற்றோர்கள் தமது கைத்தொலைபேசிகளை வழங்குவது ஆபத்தானது எனவும் இவ்வாறு செய்வதால் எதிர்காலத்தில் மாணவர்கள் தமது கல்வியை இழக்கும் நிலை கூட ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக உரிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இலத்திரனியல் பொருட்களின் பாவனையே இவ்வாறான கண் கோளாறுகளுக்கு காரணம் என வைத்தியநிபுணர் வைத்தியர் இருகல்பண்டார தெரிவித்துள்ளார்.