நாளை (வியாழக்கிழமை) யும் சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடு குறித்த ஜனநாயக ரீதியான கோரிக்கைக்கு தீர்வு வழங்காது அதிபர் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறையைக் கண்டித்தே இப்போராட்டம் தொடரவுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி