சுகாதார பணியாளர்களுக்கு வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்குத் தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும்
இப் போராட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம் பெறவுள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர் திரு.ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.