புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 13 ,
மாசி மாதம் 13,14,15,16,17 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வில் 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை கிழக்குப்பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமார் கூத்தரங்கு:_ ஆற்றுகைமைய கற்றல் _ கற்பித்தல் 14.02.2022 திங்கட்கிழமை பேராசிரியர் ந.இளங்கோ (இந்தியா) நகைச்சுவை அரசபையிலிருந்து அபத்தம் வரை 15.02.2022 செவ்வாய்க்கிழமை கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தர் அழகியற்கற்கை நிறுவகம் கட்புலத்துறை தலைவர் கலாநிதி சு.சீவரட்ணம் சிறுவர்களின் ஆளுமைவிருத்தியில் பாரம்பரிய அவைக்காற்றுகைகள் 16.02.2022 புதன்கிழமை வானொலி தொலைக்காட்சி நாடகச் செயற்பாட்டாளர் பீ.விக்னேஸ்வரன் வானொலி நாடகம் _ தொலைக்காட்சிநாடகம் – மேடைநாடகம் ஓர் பார்வை 17.02.2022 வியாழக்கிழமை அரங்கச் செயற்பாட்டாளர் செ.ரஜீவ் மலையக காமன்கூத்து
ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .
நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.