யூன் 1ம் திகதி முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் விற்க வாங்க தடை செய்யப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச கழிவு தின நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் எனவும் நாட்டில் 7,000 மெற்றிக் தொன் நெகிழிக் குப்பைகள் நாளாந்தம் உருவாகின்றன என்றும் 60 வீதமான குப்பைகளை மிக இலகுவாக உரமாக மாற்ற முடியும் பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சாஸ் பாக்கெட்டுகள் போன்றவை இன்னும் தடை செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.