இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தாமதமாகச் சென்று இலங்கைக்கு அவப்பெயர் தேடிய அமைச்சரும் அதிகாரிகளும்!!

Srilanka

இலங்கை – தென்கொரியா சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கை அமைச்சரும் அதிகாரிகளும் 30 நிமிடங்கள் தாமதமாகச் சென்று இலங்கைக்கு இழுக்கு ஏற்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையின் சமூக வலுவூட்டல் அமைச்சர் அனுபமா பாஸ்குவல் மற்றும் அவரது அதிகாரிகளே இவ்வாறு தாமதமாகச் சென்றுள்ளனர்.

தென்கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் அதிகாரி சோ சங் லீ அவர்களைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தென்கொரியா எவ்வாறு உதவலாம் என ஆராய்வதற்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையிலேயே அமைச்சரும் அதிகாரிகளும் இவ்வாறு தாமதமாக சென்றுள்ளனர்.

இவ்வேளையில் கோபமடைந்த தென்கொரியாவின் அதிகாரி, இலங்கை மக்கள் மாறவேண்டும், பொய்களைச் சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் அதனை மீறுவதும் இலங்கையின் கலாசாரமாகிவிட்டது,

சந்திப்பு ஒன்றிற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வருவது ஏற்க முடியாத ஒரு விடயமாகும். அமைச்சர்கள், அதிகாரிகளின் அசமந்த நிலை, நாட்டிற்குப் பின்னடைவையே தரும், இலங்கையின் இந்தப் போக்கு மாறவேண்டும், எனக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button