இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

துப்பாக்கிகளுடன் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது

கண்டி தெல்தெனிய அம்பகொட்ட பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், 100 தோட்டக்கள், மோட்டார் சைக்கிளுக்கான 10 உதிரிபாகங்கள், பணம் என்பவற்றுடன் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

7 லட்சம் ரூபாய் பணம், நான்கு தொலைத் தொடர்பு கருவிகள்(வோக்கி டோக்கி) ரம்போ கத்தி என்பனவும் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றிய துப்பாக்கிகளில் வாயு ரைஃபல் ஒன்றும் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் தெஹிவளை அத்திட்டிய மற்றும் நாவல பிரதேசங்களை சொந்த இடமாக கொண்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button