எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
22க்கு எதிராக வாக்களித்தவர்கள் தற்போது வாக்களிக்காமல் இருக்க சாத்தியம் அதிகம் எனவும் இவ்வாறான நிலையில் வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டு அரசாங்கம் கவிழும் வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களாலேயே வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படலாம் எனவும் அரசாங்கத்தின் சிறிய பகுதி வாக்களிக்காமல் போனாலோ அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.