இலங்கைசெய்திகள்

மெனிகே மஹே ஹிதே பாடலால் எழுந்த சர்ச்சை!!

புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, விகாரைகளில் கட்டினஇ பிங்கும’ பெரஹராவின் போது பக்திப் பாடல்கள் மற்றும் சமயப் பின்னணி கொண்ட சமய ஸ்தலத்திற்கு ஏற்ற பாடல்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மதப் பின்னணி கொண்ட பாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு பிரபலமான பாடல்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அதன் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கட்டின பெரஹராவில் சகோதர மொழிப் பாடலான ‘மெனிகே மஹே ஹிதே’ பாடல் இசைத்துக்கொண்டு சென்றமை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. சமய நிகழ்வில் இது அனுமதிக்கப்பட்டமை குறித்து விமர்சிக்கப்பட்டது.

இந்த விமர்சனங்களையடுத்து பேராசிரியர் கபில குணவர்தன மத பின்னணியற்ற பாடல்களை இசைக்கவேண்டாம் என தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி புண்ணிய விழாக்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button