நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் கவனமாக அறிக்கைகளை வெளியிடுமாறு எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
நாட்டில் உண்மைகள் மற்றும் சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்த அறிக்கைகளை வெளியிடுவது, பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று சபாநாயகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் கொந்தளிப்பான பொது உணர்வைக் கருத்தில் கொண்டு, அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abeywardena) அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செயல்முறை அல்லது வேறு ஏதேனும் நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் தேவையான எந்த விளக்கங்களையும் வழங்க நாடாளுமன்ற அலுவலகம் தயாராக உள்ளது.
எனவே அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது நாட்டின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து குடிமக்களும் அமைப்புகளும் உதவுமாறு சபாநாயகர் அலுவலகம் கோரியுள்ளது.